சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் இசையமைப்பாளர் தேவாவின் உடல்! விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்!

இளம் சிஎஸ்கே வீரர்களுக்கு பயிற்சியளித்த தோனி..! நால்வரில் யார் விக்கெட் கீப்பிங் செய்வார்கள்?

இளம் சிஎஸ்கே வீரர்களுக்கு பயிற்சியளித்த தோனியின் விடியோ குறித்து...

Csk wicket keepers

சிஎஸ்கே விக்கெட் கீப்பர்கள். - படங்கள்: சிஎஸ்கே

Updated On :

இளம் சிஎஸ்கே வீரர்களுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சியளித்த எம்.எஸ். தோனியின் (44 வயது) விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சர்மா, உர்வில் படேல் ஆகிய இளம் சிஎஸ்கே வீரர்கள் இந்தப் பயிற்சியில் இருந்தார்கள். இதனால், இந்த சீசனில் யார் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சீசனின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 30ஆம் தேதி எதிர்கொள்கிறது.

சிஎஸ்கே அணியில் எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா, உர்வில் படேல் ஆகிய நான்கு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். இதில் இந்த சீசனில் யார் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

எம்.எஸ். தோனி முழு சீசனும் விளையாடுவாரா என்ற குழப்பம் இருப்பதால், இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அணிக்கு கீப்பராக இருந்த சஞ்சு சாம்சன் தோனிக்குப் பிறகு முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Dhoni trained young CSK players..! Who among the four will keep wickets?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.