முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தோனி இல்லாமலும் முதலிடம்... அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற சிஎஸ்கே!

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட சிஎஸ்கே அணி குறித்து...

News image

சிஎஸ்கே அணி. - படம்: எக்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ்.

Updated On :9 மே 2026, 1:11 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட அணியாக சிஎஸ்கே அணி இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்சிபி அணி இரண்டாமிடத்தில் இருக்கிறதும் கவனிக்கத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி வருகின்றன.

கடந்த சீசனில் ஐபிஎல் போட்டிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ஆர்சிபி முதல்முறையாக கோப்பை வென்றது. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் மிகுந்த சுவராசியமாகச் சென்று கொண்டிருக்கின்றன.

சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வென்றால் பிளே ஆஃப்ஸுக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.

முன்னாள் கேப்டன் தோனி இதுவரை ஒரு போட்டியில் விளையாடாவிட்டாலும் சிஎஸ்கேவின் போட்டிகளைப் பார்க்கும் பார்வையாளர்கள் குறையவில்லை என்பது ஆச்சரியமான தகவலாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு போட்டிக்கான சராசரி பார்வைகளைப் பெற்ற டாப் 5 அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இருக்கும் விவரங்கள்:

1. சிஎஸ்கே - 308 மில்லியன் (30.8 கோடி) பார்வைகள்

2. ஆர்சிபி - 303 மில்லியன் (30.3 கோடி) பார்வைகள்

3. மும்பை இந்தியன்ஸ் - 293 மில்லியன் (29.3 கோடி) பார்வைகள்

4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 290 மில்லியன் (29 கோடி) பார்வைகள்

5. கொல்கத்தா - 280 மில்லியன் (28 கோடி) பார்வைகள்

Summary

Ms Dhoni is not playing ipl 2026 but still at the top; the crazy of csk is truly authentic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.