உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

சேப்பாக்கத்தில் தடுமாறும் சிஎஸ்கே அணி குறித்து...

News image

சாம்சன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குஜராத் வீரர்கள். - படம்: ஐபிஎல்

Updated On :26 ஏப்ரல் 2026, 4:25 pm IST

சேப்பாக்கத்தில் விளையாடிவரும் சிஎஸ்கே அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த சீசனில் மிகவும் குறைந்த பவர்பிளே ரன்கள் எடுத்த இரண்டாவது அணியாக சிஎஸ்கே மோசமான சாதனை படைத்துள்ளது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன் வேகப் பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவில் மிகச் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல் களமிறக்கப்பட்டார். பின்னர், இம்பாட் வீரராக வந்த சர்ஃபராஸ் கானும் ஆட்டமிழந்தார்.

ஏற்கெனவே நன்றாக விளையாடிக்கொண்டிருந்த பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? உடனேயே இம்பாக்ட் வீரரை களமிறக்கியது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், ஒரு பந்துவீச்சாளர் குறைவாக விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு சிஎஸ்கே அணி தள்ளப்பட்டுள்ளது.

பவர்பிளேவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் இந்த சீசனில் மிகவும் குறைந்த பவர்பிளே ரன்கள் எடுத்த இரண்டாவது அணியாக சிஎஸ்கே மோசமான சாதனை படைத்துள்ளது.

2026 ஐபிஎல்: பவர்பிளேவி குறைவான ரன்கள் அடித்த அணிகள்

22/3 - சன்ரைசர்ஸ் ( லக்னௌவுக்கு எதிராக)
28/3 - சிஎஸ்கே (குஜராத்துக்கு எதிராக)
29/3 - மும்பை இந்தியன்ஸ் (சிஎஸ்கேவுக்கு எதிராக)
31/3 - லக்னௌ (ராஜஸ்தானுக்கு எதிராக)

Summary

CSK Struggles Due to Changes in the Playing XI! Teams with the lowest scores in the Powerplay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.