பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அம்மாவுக்காக விளையாடிய மகன்..! சிஎஸ்கே பகிர்ந்த முகேஷ் சௌதரிக்கான பதிவு!

முகேஷ் சௌதரிக்காக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட பதிவு குறித்து...

News image

முகேஷ் சௌதரிக்காக சிஎஸ்கே வெளியிட்ட புகைப்படம். - படம்: எக்ஸ் / சென்னை ஐபிஎல்

Updated On :24 ஏப்ரல் 2026, 1:11 pm IST

சிஎஸ்கே நிர்வாகம் தனது அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌதரிக்காக வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார். இந்தச் சூழ்நிலையில் இருந்தும் நேற்று (ஏப்.23) வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கினார்.

நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், முகேஷ் சௌதரி மும்பையில் தொடக்க வீரர் டி காக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த வெற்றியை முகேஷ் சௌதரிக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார்.

போட்டியின்போது முகேஷ் சௌதரி குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருந்ததாவது:

சில தருணங்கள் போட்டியை விடப் பெரியது.

வார்த்தைகளால் சொல்ல முடியாத இழப்புக்குப் பிறகு, விளையாட வந்தது உங்களது மன வலிமையைக் காட்டுகிறது. இன்று ஒரு கிரிக்கெட்டராக மட்டுமே விளையாடவில்லை, மகன் தனது அம்மாவுக்காக விளையாடுகிறான்.

ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு பந்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். சிஎஸ்கே அணி, ரசிகர்கள் என அனைவரும் உங்கள் பக்கத்தில் இருக்கிறோம். பலம், பிரார்த்தனைகள், மஞ்சள் நிறம் எப்போதுமே முகேஷ் எனக் கூறியுள்ளது.

Summary

Some moments are bigger than the game csk special post for Mukesh Choudhary mother lose

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.