இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

மோசமாக செயல்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன், பயிற்சியாளர் குறித்து...

Chennai Super Kings' captain Ruturaj Gaikwad leaves the ground after losing his wicket during the Indian Premier League cricket match between Chennai Super Kings and Punjab Kings in Chennai, India, Friday, April 3, 2026. (AP Photo/Aijaz Rahi)

ஆட்டமிழந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட். - படம்: ஏபி

Published On :4 ஏப்ரல் 2026, 12:43 pm IST

மோசமாக செயல்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பந்துவீச்சில் மிகவும் மோசமாக செயல்பட்ட சிஎஸ்கே அணி 210 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தனது சொந்த மண்ணில் தோல்வியுற்று மீண்டும் அதிர்ச்சி அளித்தது.

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முக்கியமாக சிஎஸ்கே அணித் தேர்வு குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஏலத்திலும் நல்ல அனுபவம் மிக்க வீரர்களை எடுக்காமல், அனுபமற்ற பந்துவீச்சாளர்களை எடுத்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் யாரை பந்து வீச அழைப்பது என்பது தெரியாமல் திணறுகிறார். டி20 உலகக் கோப்பையில் பந்துவீசிய ஷிவம் துபேக்கு ருதுராஜ் அந்த வாய்ப்பை வழங்காதது பேசுபொருளாகியுள்ளது.

ஜடேஜாவுக்கு மாற்றாக ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர் இதுவரை ஒரு பந்து கூட வீசவில்லை என்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

இதுவரை ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி மிக மோசமாகவே விளையாடியுள்ளது. கடைசி 6 போட்டிகளிலும் அவர் தலைமையில் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பலரும் இது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அம்பத்தி ராயுடு, “சென்னையின் உடல்மொழி சரியில்லை. அணித் தேர்வு, பேட்டிங் லைன் அப், அதைச் சரியாக உபயோகப்படுத்துவதில்லை, பந்துவீச்சிலும் மோசமாக செயல்படுகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்தால்தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற முடியும்” என்றார்.

Summary

Will the CSK Captain Rututraj and Coach Stephen Felmming Resign?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.