தனக்குப் பிடித்த வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியைச் சேர்த்து அவருக்கு ரசிகர் ஆகியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்.26) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. 229 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் 15 வயதான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்களைக் குவித்து அதிவேக சதத்தைப் பதிவு செய்தார்.
இதுகுறித்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “வைபவ் சூர்யவன்ஷி எனக்குப் பிடித்த வீரர்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டார். அவர் பந்தை அவ்வளவு வேகமாக அடிக்கிறார். அதைப் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு பந்துவீச்சாளராக நாங்கள் மிகத் துல்லியமாகப் பந்துவீச வேண்டும். அப்படி இல்லையென்றால், அது எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் மிகவும் அசத்தலாக விளையாடுகிறார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் சிறப்பாகத் தொடங்கியுள்ளார். மேலும் அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் அணியை பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கும் வகையில் அமைத்துள்ளோம். மேலும் பந்துவீச்சாளர்களாக ரன்களைக் குறைப்பது எங்கள் பொறுப்பு.
ஒருவேளை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஸ்கோர்கள் சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் அடிப்படைக் கொள்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எனவே, எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது இரு அணிகளுக்கும் ஒன்றுதான். இரண்டு அணிக்கும் ஐந்து மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் தேவை என்று நான் நினைக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.
Summary
Australian captain Pat Cummins has stated that he has added Vaibhav Suryavanshi to his list of favorite players.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசரஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஆட்ட நாயகன் விருது எப்படி கிடைத்தது எனத் தெரியவில்லை... பாட் கம்மின்ஸ் கலகல பேச்சு!

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெரித்த ஆர்சிபி கேப்டன்!

பாட் கம்மின்ஸ் எனும் நான்... அணியில் இணைந்த சன்ரைசர்ஸ் கேப்டன்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


