இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆட்ட நாயகன் விருது எப்படி கிடைத்தது எனத் தெரியவில்லை... பாட் கம்மின்ஸ் கலகல பேச்சு!

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் போட்டிக்குப் பிறகு பேசியிருப்பதாவது...

Sunrisers Hyderabad's Pat Cummins celebrates the wicket of Punjab Kings' Suryansh Shedge during the Indian Premier League cricket match between Sunrisers Hyderabad and Punjab Kings in Hyderabad, India, Wednesday, May 6, 2026. (AP Photo/Mahesh Kumar A.)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாட் கம்மின்ஸ். - படம்: ஏபி

Published On :7 மே 2026, 12:59 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்ட் தனக்கு எப்படி ஆட்ட நாயகன் விருது கிடைத்தது எனத் தெரியவில்லை என்று ஜாலியாகப் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நேற்றிரவு ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 235/4 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 202/7 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் முதல் ஓவரில் கடைசி பந்தில் விக்கெட் எடுத்தார். அடுத்த ஓவரில் நிதீஷ் குமார் ரெட்டி ஓவரின் முதல் பந்தில் கம்மின்ஸ் ஃபீல்டிங்கினால் விக்கெட் கிடைத்தது.

இப்படியாக ஃபீல்டிங்கில் 2 விக்கெட், பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். பலம்வாய்ந்த பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீச்சு, தலைமைப் பண்பினால் சன்ரைசர்ஸ் அணி வென்றது.

சதம் அடித்த கூப்பர் கானலி ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வாகவில்லை. மாறாக அதனை வென்ற பாட் கம்மின்ஸ் பேசியிருப்பதாவது:

நான் பந்துவீசிய விதம் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இருந்தும் இந்த விருது எனக்கு எப்படி கிடைத்தது எனத் தெரியவில்லை. ஆனால், நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். புத்துணர்வாக இந்தத் தொடருக்கு வந்திருக்கிறேன். நன்றாகவும் தயாராகி வந்துள்ளேன். என்னால் வெற்றிக்கு பங்களிக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

பவர்பிளேவில் மற்ற அணிகளை விட நாங்கள் முன்னெச்சரிக்கையாக இன்று செயல்பட்டுள்ளோம். எங்களுக்கென திட்டங்கள் இருந்தன. வேறு வழியின்றிதான் பவுன்சர் பந்தை வீசினேன். நல்ல வேளையாக அது எங்களுக்கு உதவியது என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான வெற்றியினால் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Summary

I still don't know how I got that award says Pat Cummins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.