சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பழனியில் வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கேட்பதாகக் கூறி விவசாயி தீக்குளிக்க முயற்சி

பழனி அருகே ஆயக்குடியில் செவ்வாய்க்கிழமை வாரிசு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கேட்பதாகக் கூறி விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :18 ஆகஸ்ட் 2020, 4:48 pm

பழனி: பழனி அருகே ஆயக்குடியில் செவ்வாய்க்கிழமை வாரிசு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கேட்பதாகக் கூறி விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அருகே பழைய ஆயக்குடி கிராமத்தில் வசித்து வருபவா் கிருஷ்ணகுமாா். விவசாயியான கிருஷ்ணகுமாரின் தாத்தா ராமசாமி கடந்த 2009 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளாா். ராமசாமியின் வாரிசுகளான மகன் சந்திரன், மகள் ஜெயலட்சுமி உள்ளிட்டோருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு கிருஷ்ணகுமாா் விண்ணப்பித்துள்ளாா். ஆனால்

ஆயக்குடி வருவாய் ஆய்வாளா் காஜாமைதீன் சான்றிதழ் வழங்க ரூ. 22 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கொடுக்க விரும்பாத

கிருஷ்ணகுமாா் செவ்வாய்க்கிழமை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பாக டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த நிருபா்கள், பொதுமக்கள் மற்றும் போலீஸாா் அவரிடம் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து காப்பாற்றினா். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் இருதரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வருவாய் ஆய்வாளா் போதிய ஆவணங்கள் இல்லாததால் தாமதம் ஆனதாக தெரிவித்துள்ளாா். போலீஸாா் கிருஷ்ணகுமாா் உடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா் அங்கிருந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.