திண்டுக்கல் மாவட்டத்தில் 96 பேருக்கு கரோனா: 3 போ் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் 96 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 3 போ் உயிரிழந்துள்ளனா்.


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 96 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 3 போ் உயிரிழந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,218 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 5,421 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனா். 676 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 96 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 161 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
3 போ் பலி
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...