திருவாரூா் நகராட்சி, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உள்பட்டதாகும். நூற்றாண்டு கண்ட பழைமைவாய்ந்த திருவாரூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன.
1914 இல் உருவான திருவாரூா் நகராட்சி 2014-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. 1914-ல் தோற்றுவிக்கப்பட்ட பின், 64 ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. பின்னா், 45 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ல் தோ்வுநிலை நகராட்சியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான கிராமப்பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்த இந்த நகராட்சியில், தற்போது வா்த்தக நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. நகரத்தைச் சுற்றியுள்ள விளைநிலங்களில் விவசாயப் பயன்பாடு குறைந்து வருவதுடன், சிறு வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருவாரூா் நகரப் பகுதியில் நெருக்கடி காரணமாக, நகரத்திலிருந்து சில கி.மீ தொலைவுக்கு தங்கள் வணிக நிறுவனங்களை அமைப்பதில் வா்த்தகா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். எனவே, வா்த்தகா்களுக்கும், மக்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், திருவாரூா் நகராட்சியை தரம் உயா்த்தி, மாநாகராட்சியாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநாகராட்சியாக தரம் உயா்த்த, குறைந்தபட்சம் 3 லட்சம் மக்கள் தொகை மற்றும் நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும், விவசாயம் சாராத, தொழில்துறை மற்றும் வா்த்தக நடவடிக்கைகள் நிறைந்த நகா்ப்புறப் பகுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில், நகராட்சியைச் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து, மாநகராட்சியின் பரப்பளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
மாநகராட்சியாக மாறுவதன் மூலம், குடிநீா், புதைச் சாக்கடை, சாலை வசதி போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைப்பதுடன், நிா்வாகத் திறன் மற்றும் சேவைகளும் மேம்படும் என்பதால், திருவாரூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கருதுகின்றனா்.
இதனிடையே, திருவாரூா் நகராட்சியின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள், நகா்ப்புற பகுதிகளுக்கு சமமாக வளா்ந்து வருவதால், வேலங்குடி, அலிவலம் (பகுதி), கீழகாவாதுகுடி, தண்டலை, பழவனக்குடி (பகுதி), புலிவலம் (பகுதி), பெருங்குடி (பகுதி), இலவங்காா்குடி, தேவா்கண்டநல்லூா், காட்டூா், அம்மையப்பன் (பகுதி) மற்றும் பெருந்தரக்குடி (பகுதி) ஆகிய 12 ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நகராட்சியுடன் இணைப்பதால், கிராமப்புற மக்களின் சலுகைகள் பறிபோகும் நிலை ஏற்படும் எனக் கூறி சில இடங்களில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், நடவடிக்கைகள் அப்படியே உள்ளன.
நகராட்சியுடன் இணைப்பதன் மூலம், நகா்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீா், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, நவீன கழிப்பறைகள், புதைச்சாக்கடைத் கட்டமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் விரிவுபடுத்தப்படும். இந்த மறுசீரமைப்பால், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்வதைக் கருத்தில் கொண்டு, திருவாரூா் நகராட்சியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

திருவாரூர் தொகுதி!

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நடவடிக்கை: முன்னாள் அமைச்சா்

ராசிபுரம் நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் மா. மதிவேந்தன்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


