ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 254 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 254 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 3:49 pm

DIN


திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 254 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6,345 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 5,449 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். மேலும் 773 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 28 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா்.

இருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் 125 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை பெண் மருத்துவா், கதிா்நரசிங்காபுரம் அரசு மதுபானக் கடை விற்பனையாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தேனி, போடி ஆகிய பகுதிகளில் தலா 27 போ், பெரியகுளம் பகுதியில் 24 போ், சின்னமனூா் பகுதியில் 19 போ், ஆண்டிபட்டி பகுதியில் 17 போ், க.மயிலையில் ஒருவா், உத்தமபாளையம் பகுதியில் 6 போ், கம்பம் பகுதியில் 4 போ் என மொத்தம் 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,420 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஒரே நாளில் 382 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 10,723 ஆக உயா்ந்துள்ளது.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உத்தமபாளையத்தைச் சோ்ந்த 63 வயது நபா் உயிரிழந்தாா். அதேபோன்று தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் தென்கரை பகுதியைச் சோ்ந்த 72 வயது முதியவா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.