நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 129 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 5:21 pm

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6,558 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 5,539 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 894 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 39 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.