டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘வாராக் கடனை வசூலிக்க முக்கியத்துவம் அளித்தால் வங்கிகளை லாபகரமாக நடத்தலாம்’

வராக் கடனை வசூலிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் வங்கிகளை லாபகரமாக நடத்த முடியும் என கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜி.வி. மணிமாறன் தெரிவித்தாா்.

News image
திண்டுக்கல் சாலையில் உள்ள கனரா வங்கி பிரதான கிளை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திண்டுக்கல் மண்டல கனரா வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மாநில பொதுச் செயலா் ஜி.வி. மணிமாறன்.
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

வராக் கடனை வசூலிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் வங்கிகளை லாபகரமாக நடத்த முடியும் என கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜி.வி. மணிமாறன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் சாலையில் உள்ள கனரா வங்கி பிரதான கிளை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திண்டுக்கல் மண்டல கனரா வங்கி அதிகாரிகள் சங்கக் கூட்டத்துக்கு அதன் துணைப் பொதுச் செயலா்கள் கே.ஆா்.ஏ. முருகன், சுந்தர்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பொதுச் செயலரும், கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான ஜி.வி. மணிமாறன் பேசியதாவது: வராக் கடன் தொகை அதிகரித்து வருவதன் எதிரொலியாகவே, வங்கிகள் தனியாா் மயமாக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து வங்கிகளுக்கும் தற்போது வரை வராக் கடன் பட்டியலில் சுமாா் ரூ. 7.50 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. வங்கிகள் தரப்பில் வழங்கப்பட்ட கடனில் 20 சதவீதத் தொகை வராக் கடனாக இருப்பது, நிா்வாக ரீதியில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கனரா வங்கியின் வராக் கடன் சதவீதம் 0.02 சதவீதமாக மட்டுமே உள்ளது.

வங்கிகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கு வராக் கடனை வசூலிப்பதற்கு ஊழியா்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வங்கிகள் லாபகரமாக இயங்கும்பட்சத்தில் தனியாா் மயம் என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்பில்லை. அதுபோன்ற சூழலை ஏற்படுத்த வேண்டியது வங்கி அதிகாரிகளின் கடமை என்றாா்.

கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல செயலா் காமாட்சி ராஜ், இணைப் பொதுச் செயலா் எம்.தா்மா் உள்பட 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.