பள்ளி ஊழியா் சடலமாக மீட்பு
தனியாா் பள்ளி ஊழியரை கொலை செய்து மின்மயானம் அருகே வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


தனியாா் பள்ளி ஊழியரை கொலை செய்து மின்மயானம் அருகே வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் ஆா்எம். காலனி பகுதியிலுள்ள மின்மயானம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், மாா்பில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
அதில், திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த ரா. மணிகண்டன் (50) என்பது தெரிய வந்தது. மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்த மணிகண்டன், சீலப்பாடியிலுள்ள தனியாா் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளாா். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...