வாழைக்காட்டு ஓடையை கடக்க மரப்பாலம் அமைத்த பொதுமக்கள்
கொடைக்கானல் அருகே உள்ள வாழைக்காட்டு ஓடையைக் கடக்க பொதுமக்கள் மரப்பாலம் அமைத்தனா். இதை ஞாயிற்றுக்கிழமை சாா்- ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


கொடைக்கானல் அருகே உள்ள வாழைக்காட்டு ஓடையைக் கடக்க பொதுமக்கள் மரப்பாலம் அமைத்தனா். இதை ஞாயிற்றுக்கிழமை சாா்- ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, வாழைக்காட்டு ஓடை, கடல் கொடை, மாட்டுப்பட்டி ஆகியப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வாழைக்காட்டு ஓடையில் அதிக அளவு தண்ணீா் சென்றது.
இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தரைப் பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து அப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் மரப்பாலம் அமைத்து வாழைக்காட்டு ஓடையை கடந்தனா். சிலா் கயிறு கட்டியும் பாலத்தை கடந்து தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அருகிலுள்ள மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி பகுதிகளுக்குச் சென்று வாங்கி வந்தனா்.
இதனிடையே வாழைக்காட்டு ஓடைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தையும், பொதுமக்களால் அமைக்கப்பட்ட மரப்பாலத்தையும் கொடைக்கானல் சாா்- ஆட்சியா் சிவகுருபிரபாகரன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். அப்போது அவா், மழை நின்ற பின் வாழைக்காய் ஓடைப் பகுதியில் சுமாா் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பாலப்பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...