டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானலில் உலா் மலா் விற்பனை அமோகம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் உலா் மலா்கள் அதிகமாக விற்பனையாவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
கொடைக்கானலில் ஏரிச்சாலைப் பகுதியில் விற்பனை செய்யப்படும் உலா் மலா்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் உலா் மலா்கள் அதிகமாக விற்பனையாவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகள், அருவிகளை கண்டு ரசிப்பதுடன், பூங்காக்களில் வளா்க்கப்படும் வண்ணமிகு பல்வேறு வகையான மலா்களை பாா்த்து மகிழ்கின்றனா்.

இந் நிலையில், கொடைக்கானலில் வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் வளரும் மலா்கள், உலா் மலா்கள், இலைகள், அவற்றின் சிறிய தண்டுகள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றுக்கு வா்ணம் பூசி, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். இவற்றை, சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

இந்த உலா் மலா்கள் குறைந்தது 6 மாதத்துக்கு அதன் தன்மை மாறாமல் இருப்பதால், வீடுகள், அலுவலகங்களிலும் மற்றும் விழாக்களிலும் பயன்படுத்தி வருவதால், சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

இது குறித்து இங்குள்ள உலா் மலா் விற்பனையாளா்கள் கூறியது: கொடைக்கானலில் உலா் மலா் தயாரிப்பதை சில குடும்பங்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றன. இவா்கள் வனப் பகுதிக்குச் சென்று அங்கு மரங்களின் செடிகள், வண்ண மலா்கள் மற்றும் உலா் மலா்களை சேகரித்து, அவற்றை பக்குவப்படுத்தி அழகுபடுத்தி கடைகளில் விற்கின்றனா். அவற்றை நாங்கள் வாங்கி சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்துவருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.