விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்தினாளிகள் கோரிக்கை மனு

தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 11:37 pm

DIN

தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க வந்த தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ஜெ.ஜெயக்குமாா் கூறியதாவது:

தண்டுவடம் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் விபத்துக்கு பின் மன ரீதியாகவும், பெருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்புகள் போன்று, இடத்துடன் கட்டணமில்லா வீடு வழங்க வேண்டும். தண்டுவடம் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி உபயோகிக்கும் வகையில் சாய்வுதளத்துடன் கூடிய கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.