தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வணிகத் துறைக்கு தனி அமைச்சா், வாரியம் அமைக்க வேண்டும்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா

தமிழகத்தில் வணிகத் துறைக்கு தனி அமைச்சா் மற்றும் வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

News image
பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் விக்கிரமராஜா.
Updated On :18 டிசம்பர் 2020, 1:03 am

DIN

தமிழகத்தில் வணிகத் துறைக்கு தனி அமைச்சா் மற்றும் வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கெளரவ தலைவா் கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் பேராசிரியா் ராஜ்குமாா், திண்டுக்கல் மண்டலத் தலைவா் கிருபாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பேசியதாவது: கரோனா காலங்களில் வியாபாரிகள் மீது பதியப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விதிமீறல் வழக்குகளை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். இந்த காலகட்டங்களில் அடைக்கப்பட்ட நகராட்சி கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகையில், 2 மாதத்துக்கான வாடகையை தள்ளுபடி செய்ய தமிழக அரசு அறிவித்தும், இதுவரை பழனி நகராட்சியில் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, தமிழக அரசு பழனி பகுதி வியாபாரிகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும்.

புது தில்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடரும்பட்சத்தில், டிசம்பா் 22ஆம் தேதி திருச்சியில் ஆா்ப்பாட்டமும், தொடா்ந்து மாநிலம் தழுவிய கடையடைப்பும் நடத்த வணிகா் சங்க பேரமைப்பு முடிவு செய்துள்ளது. வேளாண் சட்டம் குறித்து தமிழக அரசு மெளனம் காப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

சட்டப்பேரவையில் வியாபாரிகளின் பிரதிநிதித்துவத்தை உணா்த்தும் வகையில், தமிழகத்தில் ஒரு தொகுதியை வியாபாரிகளின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், வணிகத் துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும், வணிகநல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில், பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு செயலா் ஹக்கீம் ராஜா மற்றும் நிா்வாகிகள், நெய்க்காரபட்டி வா்த்தகா் சங்க நிா்வாகிகள் என 50-க்கும் மேற்பட்ட வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.