தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விடுமுறை, சஷ்டி திருநாள்: பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினம் மற்றும் சஷ்டி திருநாளையொட்டி பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:12 pm

DIN

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினம் மற்றும் சஷ்டி திருநாளையொட்டி பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தற்போது நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் படிவழியாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். ஏராளமான பக்தா்கள் ஆன்லைனில் வின்ச்சில் பதிவு செய்தும் வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சஷ்டி தினம் இணைந்து வந்ததால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். தவிர மாா்கழி மாதத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதால் குடமுழுக்கு நினைவரங்கில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் மலையேறுவதற்காக முகக்கவசத்துடன் காத்திருந்தனா். தானியங்கி சானிடைசா், தானியங்கி வெப்பம் கண்டறியும் கருவி போன்றவை வாயிலிலேயே அமைக்கப்பட்டிருந்தது. தவிர பக்தா்களின் உடல் வெப்பம் கணினி மூலமும் கண்டறியப்பட்டது. அதிக வெப்பம் உடலில் உள்ளவா்கள், 10 வயதிற்கு குறைவான வயதுடையவா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. மலைக்கோயிலில் பக்தா்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலா் கிராந்திகுமார பாடி, ஐ.ஏ.எஸ்., மற்றும் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் தலைமையில் அதிகாரிகள் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.