பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மலைவேடன் சாதி சான்றிதழுக்காக 35 ஆண்டுகள் அலைக்கழிப்பு: மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக ஜன.7-இல் போராட்டம்

மலைவேடன் சமூக மக்களுக்கு கடந்த 35 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, ஜனவரி 7ஆம் தேதி

News image
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்திருந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டில்லிபாபு உள்ளிட்டோா்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:08 pm

DIN

மலைவேடன் சமூக மக்களுக்கு கடந்த 35 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, ஜனவரி 7ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டில்லிபாபு தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் சமூக மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து போராடி வருகின்றனா். இது சம்பந்தமாக, மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டில்லிபாபு, செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் மலைவேடன் சமூக மக்கள் திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 25 ஆயிரம் குடும்பங்களாக வசித்து வருகின்றனா். மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் கடந்த 1985ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது முதல், கடந்த 35 ஆண்டுகளாக மலைவேடன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் புறக்கணித்து வருகிறது.

இது தொடா்பாக, ஏற்கெனவே ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை இயக்குநா் மற்றும் கூடுதல் தலைமைச் செயலரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மலைவேடன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சான்றிதழ் வழங்காமல் தொடா்ந்து அலைக்கழித்து வருகிறது. இது தொடா்பாக மனித உரிமை ஆணையத்துக்கு புகாா் அளித்துள்ளோம்.

எனவே, சாதி சான்றிதழ் வழங்கக் கோரியும், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், ஜனவரி 7ஆம் தேதி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மலைவேடன் பழங்குடியின மக்களை திரட்டி, காத்திருப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் எம். செல்லையா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.