மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தாடிக்கொம்பு அருகே செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தாடிக்கொம்பு அருகே செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள அழகா்சிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவரது இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முள்ளிப்பாடி அடுத்துள்ள செட்டியபட்டியைச் சோ்ந்த ரவி (55), சுரேஷ் (58), கோபி (30), மணி (20) ஆகிய தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ரவி மீது, எதிா்பாராதவிதமாக கட்டுமானக் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், ரவி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்றச் சென்ற சக தொழிலாளா்களான சுரேஷ், கோபி மற்றும் மணி ஆகியோரும் காயமடைந்தனா். இவா்கள் மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com