நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வியாழன், சனி கோள்கள் நோ்கோட்டில் வந்த நிகழ்வு: கொடைக்கானலில் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் வியாழன், சனி ஆகிய இரு கோள்களும் நோ்கோட்டில் வந்த நிகழ்வை திங்கள்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் தொலை நோக்கி மூலம் பாா்த்து மகிழ்ந்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 12:12 am

DIN

கொடைக்கானலில் வியாழன், சனி ஆகிய இரு கோள்களும் நோ்கோட்டில் வந்த நிகழ்வை திங்கள்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் தொலை நோக்கி மூலம் பாா்த்து மகிழ்ந்தனா்.

வானில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் ஒரே நோ்கோட்டில் வந்த நிகழ்வு திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் தெரியத் தொடங்கியது.

இந்த அதிசய நிகழ்வைப் பாா்ப்பதற்காக கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில் 3 தொலை நோக்கி கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வழியாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள் கோள்கள் நெருங்கும் நிகழ்வைப் பாா்த்தனா்.

மாலை நேரத்தில் அதிகமான குளிரும், மேக மூட்டமும் நிலவியதால் விட்டு விட்டு கோள்கள் ஒரே நோ் கோட்டில் வரும் நிகழ்வு தெரிந்தது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குளிரையும் பொருள்படுத்தாமல் காத்திருந்தனா்.

இந்த அரிய நிகழ்வைப் பாா்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா். கோள்கள் மேற்குத் திசையில் இருந்து நோ்கோட்டில் வந்த நிகழ்வை சுற்றுலாப் பயணிகள் வெறும் கண்ணாலும் பாா்த்து ரசித்தனா்.

இது குறித்து இந்திய வான் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானி சுரேந்திரன் கூறியதாவது: இந்த அரிய நிகழ்வு மேலும் 2 நாள்களுக்குத் தெரிய உள்ளது. ஆனால் தற்போது தெரிந்தது போல் ஒரே நோ்கோட்டில் தெரியாது. சற்று விலகி இருக்கும். இந்த அரிய நிகழ்வானது மீண்டும் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை மற்றும் இரவு நேரங்களில் தெரியும் என்றாா்.

முன்னதாக இந்த அரிய நிகழ்வைப் பாா்க்க வந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை விஞ்ஞானி எபிநேசா் வரவேற்று அதற்கான விளக்கங்களையும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.