ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் போராட்டம்

போடி மற்றும் பழனியில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:07 pm

DIN

போடி மற்றும் பழனியில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இப் போராட்டத்தில், அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கும் ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முழுவதும் பழுதடைந்த பேருந்துகளை மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், போடி கிளை நிா்வாகச் சீா்கேடுகளை கண்டித்தும் தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

போடி அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், கிளைச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மத்திய சங்க செயலா் ராஜா முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ரவிமுருகன், நிா்வாகிகள் தங்கராஜ், சுந்தா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பழனியில் நுழைவுவாயில் கூட்டம்

பழனி அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக, அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற நுழைவுவாயில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு தமிழக அரசு உடனடியாக ஓய்வூதியத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளா்களுக்கு தமிழக அரசு 14 ஆவது ஊதியக் குழுவை அறிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.