பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைக்கு பூமாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 12:15 am

DIN

விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைக்கு பூமாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே.பாலபாரதி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான மின்சார மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும். பெண்கள் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். மேலும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் கோஷமிட்டனா். முன்னதாக சமையல் எரிவாயு உருளைக்கு பட்டை போட்டும், பூமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியும், ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.ஜானகி, நகரச் செயலா் ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜீவாநந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.