பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேளாளா் என்ற பெயரில் பல சமூகத்தைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதைக் கண்டித்து

News image
திண்டுக்கல்லிலுள்ள பழனி, திருச்சி சாலை சந்திப்புப் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளாளா் முன்னேற்ற சங்கத்தினா்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:53 am

DIN

வேளாளா் என்ற பெயரில் பல சமூகத்தைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதைக் கண்டித்து திண்டுக்கல்லில் வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக திண்டுக்கல்-திருச்சி சாலையிலுள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அச்சங்கத்தினா், பேரணியாக பழனி சாலை சந்திப்புக்கு வந்தனா். அங்கு மாநிலத் தலைவா் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில கௌரவத் தலைவா் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தாா்.

அப்போது பல்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்களை வேளாளா் என்ற பொதுப் பெயரில் ஒருங்கிணைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவா்கள் கோஷமிட்டனா். இதில் பிள்ளைமாா், கவுண்டா், முதலியாா், வெள்ளாள செட்டியாா் உள்ளிட்ட சமூகத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.