

திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் புதன்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
மாா்கழி மாத திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் உள்ள கைலாசநாதா் சன்னிதியில் ஆருத்ரா தரிசன வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னா், பக்தா்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலிலும் நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.