பழனிக்கோயில் குடமுழுக்கு பணிக்கு திருப்பணிக்குழு அமைக்க பக்தர்கள் கோரிக்கை

பழனியில் திருக்கோயில் குடமுழுக்கு பணிகள் துவங்கியுள்ள நிலையில் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் வகையில் திருப்பணிக்குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனிக்கோயில் குடமுழுக்கு பணிக்கு திருப்பணிக்குழு அமைக்க பக்தர்கள் கோரிக்கை

பழனியில் திருக்கோயில் குடமுழுக்கு பணிகள் துவங்கியுள்ள நிலையில் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் வகையில் திருப்பணிக்குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் உலகப்பிரசித்த பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்கான பணிகள் நடைபெறவில்லை என ஏராளமான முருகபக்தர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலாலய பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து பணிகள் துவங்கும் என்ற நிலையில் எந்த பணியும் நடைபெறாத நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக திருக்கோயில்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தவற்கு தடை விதிக்கப்பட்டது.  

இதனால் கோயில்களில் எந்த பணிகளும் நடத்தப்படாமல் ஆறுகால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. தற்போது பழனிக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் வேகமாக துவங்கியுள்ளது.  நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மலைமேல் உள்ள கோயிலுக்கு சென்று குடமுழுக்கு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோபுரங்களுக்கு சாரம் கட்டும் பணி, பிரகாரங்களில் வர்ணம் பூசும் பணி,  சேதமடைந்த சுதைகளை புதுப்பிக்கும் பணி ஆகியன நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலைக்கோயிலுக்கு செல்லும் பணியாளர்களுக்கு போதிய கொரோனா பரிசோதனைகள் செய்யப்படாததால் குருக்கள் மற்றும் பண்டாரங்களுக்கு கரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.  

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட திருப்பதி கோயிலிலேயே அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் எந்த கட்டுப்பாடும் இன்றி பணிக்கு வருவோரால் அரச்சகர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பூஜைகளில் தடங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என பலரும் அச்சம் தெரிவித்துள்னர்.   கோயில் திறந்திருந்த காலத்தில் பணிகள் நடைபெறாமல் ஊரடங்கு காலத்தில் கோயில் நிர்வாகம் அவசர அவசரமாக திருப்பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை திருப்பணிக்குழு நியமிக்கப்படாதது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2006ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற போது விலைமதிப்பற்ற நவபாஷாண முருகன் சிலையை கடத்த முயற்சிகள் நடைபெற்றதாக ஓய்வு பெற்ற ஐஜி., பொன்.மாணிக்கவேல் புகார் செய்திருந்த நிலையில் இந்த முறையும் நீதிமன்ற உத்திரவின் படி கும்பாபிஷேக திருப்பணிக்குழு அமைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது முறைகேடுகளை நடக்க வழிவகுக்கும் என பல்வேறு இந்து அமைப்புக்களும் புகார் செய்துள்ளன. மேலும், ஊரடங்கு காலத்திலேயே குடமுழுக்கும் நடத்தினால் என்ன நடந்ததது என்பதே பொதுமக்களுக்கு தெரியாமல் போய்விடும் என்பதால் தமிழக அரசு திருக்கோயில் பணிகளுக்கு முறையான நபர்களை கொண்டு கும்பாபிஷேக திருப்பணிக்குழு அமைக்க வேண்டும் மற்றும் அதில் உள்ளூர் பிரமுகர்களும் இடம்பெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com