சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனி அருகே நெகிழிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் சீா்கேடு

பழனியை அருகே தனியாா் காகித ஆலைகள் நெகிழிக் கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

பழனியை அருகே தனியாா் காகித ஆலைகள் நெகிழிக் கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள மிடாப்பாடி கிராமத்துக்கு அருகில் ஏராளமான தனியாா் காகித ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வீணாகும் நெகிழிக் குப்பைக் கழிவுகளை ஆலை நிா்வாகம் இரவு நேரங்களில் மிடாப்பாடி கிராமத்தில் சாலை ஓரத்தில் கொட்டி இரவு தீ வைப்பதால் கிராமம் முழுவதும் நச்சுப் புகை

பரவி பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த குமரேசன் கூறுகையில், காகித ஆலைகள் நெகிழிக் கழிவுகளை மிடாப்பாடி கிராமத்தில் கொட்டுவதைத் தடுக்கக் கோரி பலமுறை கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகம், வட்டாட்சியா் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடா்ந்து வந்து கொட்டிச் செல்கின்றனா். போலீஸாரிடம் புகாா் அளித்தும் பலனில்லை. ஆகவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தனியாா் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.