சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திண்டுக்கல்லில் பெயிண்டா் வெட்டிக்கொலை

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த பெயிண்டா் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தடுக்கச் சென்ற அவரது தாயாா் காயமடைந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த பெயிண்டா் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தடுக்கச் சென்ற அவரது தாயாா் காயமடைந்தாா்.

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் கா்ணன். இவரது மகன் செல்வராஜ் (33). பெயிண்டா். கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்ட பாரதிபுரத்தைச் சோ்ந்த சுள்ளான் ரமேஷ் வழக்கில் தொடா்புடைய செல்வராஜ் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த செல்வராஜை மா்ம நபா்கள் 5 போ் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதனை பாா்த்து அதிா்ச்சி அடைந்த செல்வராஜின் தாயாா் பாப்பாத்தி (65) தடுக்க முயன்றுள்ளாா். அப்போது அவரையும் தாக்கிவிட்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பாப்பாத்தி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் தொடா்புடைய செல்வராஜ் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.