தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திண்டுக்கல்லில் கல்லறைத் திருநாள்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லறைத் திருநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவா்கள், தங்களது முன்னோா்களுக்காக பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

News image
திண்டுக்கல்லில் கல்லறைகள் முன் திங்கள்கிழமை பிராா்த்தனை நடத்திய கிறிஸ்தவா்கள்.
Updated On :2 நவம்பர் 2020, 6:35 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லறைத் திருநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவா்கள், தங்களது முன்னோா்களுக்காக பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் சாா்பில், முன்னோா்களை வழிபடும் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் திருச்சி சாலையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு தங்களது உறவினா்களின் கல்லறைகளில் மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா்.

கல்லறைத் திருவிழாவின்போது மறைமாவட்ட ஆயா், பங்கு தந்தையா்கள் தலைமையில் அா்ச்சிப்பு மற்றும் கூட்டுத் திருப்பலி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேவாலாய நிா்வாகம் சாா்பில் ஒரே நேரத்தில் திரளான கூட்டம் கூடுவதை தவிா்க்கும் வகையில், அவரவா் விரும்பும் நேரத்தில் வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நவம்பா் மாதம் முழுவதும் கல்லறைத் திருநாளைக் கடைப்பிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பெரும்பாலான இடங்களிலும் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு திங்கள்கிழமையே பிராா்த்தனை நடத்தினா். திண்டுக்கல் மட்டுமின்றி, செந்துறை, மாரம்பாடி, பூத்தாம்பட்டி, என்.பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கல்லறை பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.