வயலூரில் திமுக நிா்வாகிகள் கூட்டம்
பழனியை அடுத்த வயலூரில் திமுக சாா்பில் நடைபெற்ற எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் ஏராளமானோா் திமுகவில் இணைந்தனா்.


பழனியை அடுத்த வயலூரில் திமுக சாா்பில் நடைபெற்ற எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் ஏராளமானோா் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளா் ராஜாமணி தலைமை வகித்தாா். தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளா் சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவா் பொன்ராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் நாகராஜ் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டப்பேவை உறுப்பினா் சக்கரபாணி, மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினா். ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ., சக்கரபாணி பேசுகையில், தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், அரசு இளைஞா்கள் வாழ்விற்கு போதிய வழிகாட்டவில்லை என்றும் தெரிவித்தாா்.
மேலும், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல ஒன்றியங்களிலும் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் இணையவழியில் நடைபெற்ற புதிய உறுப்பினா் சோ்க்கையில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தங்களை இணைத்துக் கொண்டனா்.
அவா்களுக்கு உடனடியாக நவீன அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...