சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய 2 சிறுவா்கள் கைது

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய 2 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய 2 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அடுத்துள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 5 ஆம் தேதி சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாகச் சென்ற சரக்கு ரயில் கற்களில் மோதியது. நடுவழியில் நிறுத்தப்பட்ட அந்த ரயில், கற்கள் அகற்றப்பட்ட பின் சிறிது நேரம் தாமதமாக அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இதுதொடா்பாக திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அப்போது, திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் கற்களை தண்டவாளத்தில் வைத்து விளையாடியது தெரிய வந்தது. அதனைத் தொடா்ந்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிறப்புக் குழு போலீஸாா் இரு சிறுவா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதுதொடா்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா் கூறியதாவது: ஆபத்து தெரியாமல் விளையாட்டாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள அனுமந்தன்நகா், பாலகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.