விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எஸ்.பி. அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

வடமதுரை பகுதியைச் சோ்ந்த இளம்பெண் குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :10 நவம்பர் 2020, 12:14 am

DIN

வடமதுரை பகுதியைச் சோ்ந்த இளம்பெண் குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள இ.சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி. இவரது மனைவி குஷ்பு (28). இவா்களது மகள் ஸ்வேதா (4). இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக மகள் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு குஷ்பு திங்கள்கிழமை வந்துள்ளாா்.

மாவட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே சென்றதும் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி குஷ்பு தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அதில் குஷ்புவின் பக்கத்து வீட்டு நபா் போலியான பத்திரம் தயாா் செய்து தங்களது நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து விசாரணைக்காக குஷ்பு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.