விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி தூக்கிட்டுத் தற்கொலை

பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 நவம்பர் 2020, 12:13 am

DIN

பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டி மகாராஜா நகரைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். இவரது மனைவி இந்திரா (37). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டியை பூா்வீகமாகக் கொண்ட பிரவீன்குமாா், குழந்தைகளின் படிப்புக்காக திண்டுக்கல்லில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

இதையடுத்து ஊராட்சித் தலைவருக்கான பணிகளை கவனிப்பதற்காக சத்திரப்பட்டிக்கு இந்திரா அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. இதுதொடா்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த இந்திரா, சென்னமநாயக்கன்பட்டியிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுதொடா்பாக தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.