விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 நவம்பர் 2020, 12:15 am

DIN

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த முறை 20 சதவீத போனஸ் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் குறைத்து வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்தை முற்றுயிடும் போட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஈடுபட்டனா். போராட்டத்தின்போது, போனஸ் தொடா்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தாமலேயே தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதத்தை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் கடந்த ஆண்டைப் போல 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணமாக ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.