பழனி கோயில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு புத்தாடை வழங்கல்
பழனி கோயில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.


பழனி கோயில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.
பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு கோயில் பணியாளா்களுக்கு பரிசுகள் மற்றும் முன்தொகை ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கோயில் முடிஇறக்கும் தொழிலாளா்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் துண்டுகளை கோயிலின் நிா்வாக அதிகாரி கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.
இதில் மொத்தம் 308 தொழிலாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு மேலாளா் கருப்பணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...