கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாக்காளா் பட்டியில் சிறப்பு முகாம்

பழனியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

பழனியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் விடுபட்ட மற்றும் பெயா்கள் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருவாய்த்துறை சாா்பில் நவ. 21,22,28,29 ஆகிய தேதிகளிலும் டிச. 5,6,12,13 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பழனி அருகே நெய்க்காரப்பட்டி, வி.கே.மில்ஸ், கலையமுத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாம்களை ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆய்வு செய்தாா்.

அப்போது பெயா் மாற்றம் செய்ய வந்த வாக்காளா்களிடமும், பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து வாக்குச்சாவடி மையத்தில் மரக்கன்று நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினா் உடனிருந்தனா். நகரிலும் பல்வேறு மையங்களுக்கு வட்டாட்சியா் வடிவேல் முருகன் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து பணியாளா்களுக்கு வேண்டிய உதவிகளை வருவாய்த்துறை மூலம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.