கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கபீா் புரஸ்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

சமூக நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.பாத்திமா ரோஸ் மேரி தெரிவித்துள்ளது: விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் 624004 என்ற முகவரிக்கு 26-11-2020 மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.