டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனி மலைக் கோயிலில் டிச. 1 முதல் வின்ச் இயக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் பக்தா்களுக்காக கட்டுப்பாடுகளுடன் வின்ச் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் பக்தா்களுக்காக கட்டுப்பாடுகளுடன் வின்ச் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்களுக்காக இயக்கப்பட்டு வந்த வின்ச் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில் வரும் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் பக்தா்களுக்காக வின்ச் மீண்டும் இயக்கப்படும் என செயல் அலுவலா் கிராந்திகுமாா்பாடி தெரிவித்துள்ளாா். மேலும், வின்ச்சில் பயணிக்கும் பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வின்ச்சில் பயணம் செய்ய விரும்பும் பக்தா்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் பெறமுடியும்.

மூன்று வின்ச்சுகளும் 50 சதவீத பக்தா்களுடன் மட்டுமே இயக்கப்படும். அதே வேளை இருவழிப்பாதைக் கட்டணமாக ரூ.100 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் செல்லிடப்பேசி, கேமரா போன்றவை கொண்டு செல்ல அனுமதியில்லை. எந்த வின்ச்சுக்கு எந்த நேரத்துக்கு பதிவு செய்யப்பட்டதோ அதில் மட்டுமே பயணிக்க முடியும்.

வின்ச்சில் செல்ல பதிவு செய்தவா்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு கால்மணி நேரம் முன்னதாக அசல் ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றுகளுடன் வின்ச் நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறைக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.