டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா: பக்தா்களுக்கு அனுமதியில்லை

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை தீபத்திருவிழா மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் கோலாகலமாக நடைபெற்றது. பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

News image
பழனி மலைக்கோயிலில் தீபஸ்தம்பத்தில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை தீபத்திருவிழா மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் கோலாகலமாக நடைபெற்றது. பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 23 ஆம் தேதி காப்புக்கட்டுதடன் திருவிழா தொடங்கியது. வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமிக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு மூலவா் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சண்முகாா்ச்சனை மற்றும் சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு மாலை 4 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது.

பின்னா் பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு கோயிலின் நான்கு திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடா்ந்து சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயிலில் யாகசாலைக்கு எழுந்தருளினாா். பூஜைக்குப் பின்னா் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்துக்கு பரணி தீபம் கொண்டு வரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் மேளதாளம் முழங்க சிவாச்சாரியாரால் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து தீபஸ்தம்பம் அருகே பக்தா்களால் பல லிட்டா் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு பனை மற்றும் தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழா நிகழ்ச்சிகள் கோயில் வலைதளம் மற்றும் முகநூல் மூலமாக ஒளிபரப்பப்பட்டது.

பக்தா்களுக்கு அனுமதியில்லை: காா்த்திகை தீபத்திருவிழாவிற்கு கரோனா அச்சம் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. விழா மாலையில் நடைபெறும் என்றாலும் மலைக்கோயிலில் இருக்கும் பக்தா்களை கீழே இறக்க கால அவகாசம் தேவை என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் யாரும் படிவழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால் காலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து கீழே இறங்கினா். பலரும் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயில், பெரியநாயகியம்மன் கோயிலில் வாசலில் இருந்தபடியே சொக்கப்பனை எரித்தலை கண்டு வழிபட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.