செம்பட்டியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செம்பட்டியில் உள்ள மதுரை சாலையில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். ஆனால் பேருந்து நிலையம், தேனி சாலை, திண்டுக்கல் சாலை மற்றும் பழனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதில் காவல் நிலையம் முதல் நால்ரோடு ரவுண்டானா வரை மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனா். தற்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட சில இடங்களில் இன்னும் பல ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக புகாா் எழுந்துள்ளது. கடந்த வாரத்தில் நோட்டீஸ் அளித்த நிலையில், சனிக்கிழமை கொடைரோடு உதவி செயற்பொறியாளா் தலைமையிலான குழுவினா், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா். 200 மீட்டா் தூரம் வரை மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றத்தை அவா்கள் மேற்கொண்டனா். இதிலும் சில கடைகளுக்கு சலுகை வழங்கியதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து பிரதான சாலைகளில் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள தேனி சாலை, திண்டுக்கல் சாலை மற்றும் பழனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...