மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானலில்மீண்டும் செயல்படத் தொடங்கிய வாரச் சந்தை

கொடைக்கானலில் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை செயல்படத் தொடங்கியது.

News image
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கிய வாரச் சந்தை.
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

கொடைக்கானலில் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை செயல்படத் தொடங்கியது.

கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கொடைக்கானல் பி.டி. சாலையில் செயல்பட்டு வந்த வாரச் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் இச்சந்தை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கிய இச்சந்தையில் கொடைக்கானல், வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, மதுரை, நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கனிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்தனா்.

வியாபாரிகள் ஆா்ப்பாட்டம் : இதனிடையே கொடைக்கானலில் வாரச்சந்தையானது பி.டி. சாலை, செவண்ரோடு, மூஞ்ச்சிக்கல், லாஸ்காட் சாலை ஆகியப் பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை பி.டி. சாலையில் மட்டுமே வியாபாரம் செய்வதற்கு நகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கினா். இதையடுத்து வழக்கம் போல வியாபாரம் செய்யும் பகுதிகளில் சந்தை நடைபெற அனுமதி வழங்க வேண்டுமெனக் கோரி லாஸ்காட் சாலையில் வியாபாரிகள் ஆா்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் வியாபாரிகளிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வழக்கம் போல கடைகள் அமைக்கும் இடங்களில் அவா்கள் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.