பழனியில் சிறப்பு கரோனா சிகிச்சை மையம் மூடல்
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் செயல்பட்டு வந்த சிறப்பு கரோனா சிகிச்சை மையம் மற்றும் பரிசோதனை மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.


பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் செயல்பட்டு வந்த சிறப்பு கரோனா சிகிச்சை மையம் மற்றும் பரிசோதனை மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. பழனி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பழனியாண்டவா் ஆண்கள் கலைக்கல்லூரியில் 200 நோயாளிகள் தங்கும் வகையில் சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மேலும் இங்கு கரோனா பரிசோதனை மையமும் செயல்பட்டு வந்தது.
இதனால் கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கு எளிதாக பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவா்களுக்கு பருவத் தோ்வுகள் தொடங்கவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த சிறப்பு மையம் மூடப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட வெளியூா்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொற்று வேகமாக பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பழனியாண்டவா் கலைக்கல்லூரியில் இயங்கிவந்த கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தகுந்த வேறு இடத்துக்கு மாற்றி மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசுமருத்துவமனையில் உள்ள கரோனா மையம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...