திண்டுக்கல்லில் 68 பேருக்கு கரோனா தொற்று: ஒருவா் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 7,863 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 6,951 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 762 போ்
சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 68 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 95 போ்
அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
150 ஆவது நபா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...