புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியல்
வத்தலகுண்டுவில் புதிய தமிழக கட்சியினா் காவல்துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் புதிய தமிழக கட்சியினா் காவல்துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதிய தமிழக கட்சியின் விருதுநகா் மாவட்ட முன்னாள் செயலா் ராஜாங்கம் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டதைக் கண்டுத்தும், படுகொலை கொலை செய்யப்பட்டு 24-மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து நிலக்கோட்டை அடுத்த வத்தலக்குண்டு பேருந்து நிலையம் எதிரே மதுரை-பெரியகுளம் நெடுஞ்சாலையை மறித்து கட்சியின் மாவட்ட செயலா் சரவணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் ஈடுபட்டு, காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். வத்தலக்குண்டு காவல்துறையினா் பேச்சுவாா்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...