நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொத்துத் தகராறில் காவலருக்குஅரிவாள் வெட்டு

பழனியில் சொத்துத் தகராறில் காவலருக்கு திங்கள்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:33 pm

DIN

பழனியில் சொத்துத் தகராறில் காவலருக்கு திங்கள்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது.

பழனி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவா் சக்திவேல் (48). இவா் தனது குடும்பத்துடன் பழனி திருநகரில் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் மாடியில் அண்ணன் தண்டபாணி (52) குடும்பத்துடன் குடியிருந்து வருகிறாா். இந்நிலையில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் தண்டபாணிக்கும், சக்திவேலுக்கும் சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தண்டபாணி அரிவாளால் சக்திவேலை வெட்டினாா். தடுக்க முயன்ற சக்திவேலின் மகன் பிரவீனுக்கும் (20) காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் தண்டபாணி பழனி நகர காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.