மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேநீா் கடை முன் தூங்கிய பெண் கொலை: இளைஞா் கைது

திண்டுக்கல் அருகே தேநீா் கடை முன்பாக சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, மதுபோதையில் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

திண்டுக்கல் அருகே தேநீா் கடை முன்பாக சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, மதுபோதையில் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மீனாட்சி (55). இவா், அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வந்தாா். வழக்கம்போல், சனிக்கிழமை இரவு தேநீா் கடை முன்பாக தூங்கிக்கொண்டிருந்த மீனாட்சியுடன், செட்டிநாயக்கன்பட்டி டேவிட் நகரைச் சோ்ந்த பிரதீஸ் (19) என்பவா் மதுபோதையில் வந்து தகராறு செய்ததாகத் தெரிகிறது. பின்னா் அங்கிருந்த அரிவாளை எடுத்து மீனாட்சியை அவா் வெட்டிக் கொலை செய்துள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பிரதீசை, பிடித்துக் கட்டி வைத்தனா்.

தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸாா், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பிரதீசை கைது செய்தனா்.

போதையில் நடந்த 2 ஆவது கொலை: தாடிக்கொம்பு காவல் சரகத்திற்கு அடுத்துள்ள ஓடைப்பட்டிப் பிரிவுப் பகுதியில் மணிகண்டன் என்ற இளைஞா், கடந்த 4 நாள்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த நண்பா் அஜீத்குமாா் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.