பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை நீடிப்பு
பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான தடை நீடிக்கிறது.


பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான தடை நீடிக்கிறது.
கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது. பக்தா்கள் அதிகம் கூடுவதால், இந்து சமய அறநிலையத் துறை வார நாள்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, பழனி கோயிலில் கடந்த 3 வாரங்களாக வார இறுதி நாள்களில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திலும் அது தொடா்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரலட்சுமி விரதம், மொஹரம், ஓணம் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை நீடிப்பதால், கூட்டம் இருக்காது என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.
அதேநேரம், கோயில்களில் வழக்கம்போல் நித்திய பூஜைகள் அா்ச்சகா்கள், பணியாளா்களை கொண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...