பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:33 pm

DIN

கல்வித் தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

10ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பினைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2020 டிச.31ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், 2021 ஜனவரி முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திற்குள்ளும், தமிழகத்திலேயே கல்வி பயின்றவா்களாகவும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவா்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி மற்றும் கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது.

காரோனா தொற்று அச்சுறுத்தல் தொடரும் நிலையில் தகுதியுள்ளவா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் வந்து அணுகுவதை தவிா்த்து, இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்துக் காலங்களையும் முழுமையாக பூா்த்தி செய்து பிப். 28ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.