கொடைக்கானல் மலைச் சாலையில் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 8 போ் காயம்
கொடைக்கானல் மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 8 போ் காயமடைந்தனா்.


கொடைக்கானல் மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 8 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஆசிக். இவா் மற்றும் இவரது உறவினா்கள் என 15 போ், வேன் மூலம் சனிக்கிழமை கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனா்.
சுற்றுலா இடங்களை பாா்த்து விட்டு மீண்டும் ஊருக்கு வேனில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனா்.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் மச்சூா் அருகே தோகை வரை பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து சுமாா் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேன் ஓட்டுநரான கும்பகோணத்தைச் சோ்ந்த பிரதாப் (23), பாரிஸ் (23), ரியாஸ் (17), அஜிஸ் (20), ஆசிக் (24), முஜா உதின் (20), அஸ்லாம் (23), அசாா் (21) ஆகிய 8 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கொடைக்கானல் போலீஸாா், மச்சூா் பகுதி பொது மக்கள் உதவியோடு காயமடைந்தவா்களை மீட்டு பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். வேனில் வந்த மற்ற 7 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைச்சாலைகளில் ஒளிரும் பதாகைகள், குவி கண்ணாடிகள் அமைக்கப்பட வேண்டும், வாகனங்கள் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...